திருப்பூரில் ஆறாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: 45 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆறாவது ஞாயிற்று கிழமையாக இன்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆறாவது ஞாயிற்று கிழமையாக இன்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1106 ஆக உயர்ந்துள்ள நிலையில், முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 



மாவட்டம் முழுவதும் 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் விசாரணைக்கு, பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு காவல்துறையினரால் அடைக்கப்படுள்ளது. இதனால் மாவட்டத்தில், மருந்து மற்றும் மருத்துவமனைகள் தவிர அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு எந்தவித நடமாட்டமும் இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...