கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த வருடம், மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட கனமழையால் காண்டூர் கனல்பகுதியில் பாறை விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைவாழ் மக்கள் இருந்த வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
நள்ளிரவு நடந்த இந்த வெள்ளப் பெருக்கினால் சுந்தரி என்ற இரண்டு வயது பெண் குழந்தை அடித்து செல்லப்பட்டு, 15 நாட்களுக்கு பிறகு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டெடுத்தனர். இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தற்காலிகமாக மின்சார வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு நிரந்தரமாக வீடுகள் கட்டிகொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு மூலமாக இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் ஜெயராமன் ரூபாய் 4 லட்சம் வழங்கினர். மேலும், எம்எல்ஏ நிதியிலிருந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு சார்பில் நிதி வழங்கப்பட்டது.
சர்கார்பதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டி தருவதாக உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ஒரு வருடம் ஆன நிலையில் இன்று வரை அம்மலைவாழ் மக்களுக்கு குடியிருப்பு கட்டி தராதது அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வரும்நிலையில், எங்கு, இந்த ஆண்டு மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் வீடுகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர்.
வனதுறையினர் மட்டும் வருவாய்த்துறையினர் தங்களுக்கு விரைவில் வீடு கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அப்பகுதி மலைவாழ் மக்கள்.