கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லையில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதையடுத்து அவர்களை கண்காணிக்க மாநகர காவல் துறை சார்பில் ட்ரோன் கேமராக்கள் தயார் படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் இரவு நேரத்தில் டிரோன் கேமராக்களை பறக்கவிட, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் சிறு முன்னோட்ட காட்சிகளை வீடியோவாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த இரவு நேர டிரோன் கேமராக்கள் முதலில் சிங்காநல்லூர் பகுதியில் பறக்க விடப்பட உள்ளன.
கோவையில் டிரவுசர் கொள்ளை கும்பல் சிங்காநல்லூர் பகுதியில் அதிகமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் ஒருவனை நேற்று சிங்காநல்லூர் போலீஸார் பிடித்தனர். எனவே, சிங்காநல்லூர் பகுதியில் முதலில் இந்த டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட உள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.