பள்ளிக் குழந்தைகளின் சீருடைகளை கைத்தறி ஆடைகளாக மாற்ற வேண்டும் - மத்திய ஜவுளித் துறைக்கு ஈஷா ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்

கோவை: ”பள்ளிக் குழந்தைகள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதன் மூலம் கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவிக்க முடியும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கோவை: ”பள்ளிக் குழந்தைகள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதன் மூலம் கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவிக்க முடியும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

நான் இயந்திரங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ எதிரானவன் இல்லை. ஆனால், அதேசமயம், மனிதர்களின் கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களுக்கு தனித்துவமான கலைநயமும், அழகுணர்ச்சியும் இருக்கிறது - சத்குரு ஜக்கி வாசுதேவ்.

கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் ’ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் அவருடன் கலந்துரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) ஆன்லைன் மூலம் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் பேசுகையில்: 

நான் இயந்திரங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ எதிரானவன் இல்லை. ஆனால், அதேசமயம், மனிதர்களின் கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களுக்கு தனித்துவமான கலைநயமும், அழகுணர்ச்சியும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவை மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருப்பதை நாம் உணர வேண்டும்.

பள்ளிகள், சுற்றுலா மற்றும் விமானத்துறைகளில் கைத்தறி ஆடைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்க முடியும். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதற்கு அரசு தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். இப்போது, குழந்தைகள் பாலிஃபைபரால் ஆன சீருடைகளைத் தான் அணிகின்றனர். 

இறந்த மீன்களை பதப்படுத்த பாலிஃபைரை பயன்படுத்தலாம். ஆனால், உயிர் துடிப்போடு வளரும் குழந்தைகள் அதை அணியக் கூடாது. அது மிகப்பெரிய குற்றம். பாலிஃபைபர் துகள்கள் தோல் வழியாக உடலினுள் புகுவதால் உடலளவிலும் மனதளவிலும் மற்றவர்களை விட குழந்தைகள் எளிதில் பாதிக்கப்பட்டுவார்கள். 

மேலும், நம் பாரத தேசத்தில் இருப்பதை போன்று விதவிதமான பாரம்பரிய ஆடை ரகங்கள் வேறு எந்த தேசத்திலும், கலாச்சாரத்திலும் இல்லை. ஒரு காலத்தில், ஆடை ஏற்றுமதியில் உலகின் முன்னணி தேசமாக நாம் இருந்தோம். அந்த பெருமையை நாம் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். விவசாயத்திற்கு அடித்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இது உள்ளது. 

மேலும், கரும்புச்சக்கை, வாழைநார் மற்றும் சணல் பயன்படுத்தியும் இயற்கை இழை ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது, என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

அவரின் பல்வேறு ஆலோசனைகளை வரவேற்று ஆமோதித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் பேசுகையில்: 

நவீன சந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்துவது தான் உண்மையான சவாலாக இருக்கிறது. இதற்காக, நாங்கள் பிபா, அரவிந்த் மில்ஸ் போன்ற மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் நெசவாளர்களிடம் இருந்து நேரடியாகவே ஆடைகளை கொள்முதல் செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் துறையின் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1,300 கோடியை அரசு முதலீடு செய்துள்ளது. இன்னும் பல விஷயங்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. கைத்தறி ஆடைகளை நன்றாக வடிவமைப்பது மட்டுமின்றி, நல்ல விலையில் அவை மக்களுக்கு கிடைக்கவும் விரும்புகிறோம். இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் கட்டுப்படியான விலையை உறுதி செய்வதன் மூலம் ஒரு பெரும் சந்தை வாய்ப்பை நம் கைத்தறி நெசவாளர்களுக்குக் உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...