கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, சாய்ந்த மரங்கள், வீடுகளுக்குள் வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர், வைத்தியநாதன் தலைமையில் பேரிடர் மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் கூறுகையில், அபாய நிலையில் உள்ள மக்களை அப்புறப்படுத்த தயக்கம் காட்ட கூடாது. மக்கள் உயிர் காப்பது அவசியம், எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்.
மேலும், சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துதல், மின் இணைப்பு தடை இல்லாமல் கிடைக்க நடவடிக்கை, சுத்தமான குடிநீர் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.
எனவே, அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 24 மணிநேரமும் செயல்படும் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை மையம் துவக்கப்பட்டுள்ளது எனவும் வால்பாறை பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
நகராட்சி - 04253 222324 வருவாய்த்துறை - 04253 222305 காவல்துறை 94981 01201 என்ற உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வால்பாறை முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவும், அக்கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வைத்தியநாதன் அறிவுறுத்தினார்.
வட்டாட்சியர், ராஜா, நகராட்சி ஆணையாளர், பவுன்ராஜ் காவல்துறை ஆய்வாளர், மகேஸ்வரி, மின்வாரிய பொறியாளர், கார்த்திக் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், தங்கராஜ் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.