புதிய கல்வி கொள்கை மற்றும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கோவை: கோவையில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை மற்றும் EIA சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டது.

கோவை: கோவையில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை மற்றும் EIA சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் புதிய கல்வி கொள்கை 2020 ஐ நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, இச்சட்டத்திற்கான வரைவு மசோதா வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது.

இதனால், சமூக நீதியை பறிப்பது மும்மொழி கொள்கையை திணிப்பது போன்ற உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் புதிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வேண்டும். இந்த கொள்கையை அமல்படுத்துவது என்பது மாநிலங்களில் உரிமையை பறிப்பதாக உள்ளது.

ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி கனவை நாசமாக்கிற, இக்கல்வி கொள்கையை அமல்படுத்தினால், அது தேசத்தை பின்னுக்கு இழுக்கும் செயலாக அமையும்.எனவே, கோவை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறோம்.

கோவை மாவட்டத்தில் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலை பாதிக்கும் EIA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். 

மத்திய அரசு முன் வைத்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA Draft 2020) என்பது நாட்டின் இயற்கை வளங்களை பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் குறித்து எந்தவித கவனமும் கொள்ளாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே கவனத்தில் கொள்ளப்படுகிறது.

தொழில் துறையினருக்கு சலுகை என்பதன் பெயரால் இந்திய- அந்நிய பெரு முதலாளிகளின் பார்வை, இப்பரந்த தேசத்தின் பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களை சூறையாடுவதே ஆகும். அதற்கு ஆதரவான EIA 2020 ஐ முறியடிப்போம்.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, கோவையின் இயற்கை அரணாகவும், குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA Draft 2020) திரும்பப்பெற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...