கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலகத் தாதா அங்கொட லொக்கா மர்ம உயிரிழப்பு தொடர்பான விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இதில், அவனது கைவிரல் நகங்கள், கால்விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கொட லொக்கா, பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கோவை காளப்பட்டியில் தனது காதலியுடன் வசித்து வந்த அவன் கடந்த ஜூலை 4 ஆம் தேதி, உயிரிழந்த நிலையில் மதுரையில் அவனது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்த அவனது காதலி அமானி தான்ஜி என்ற இலங்கையைச் சேர்ந்த பெண், மேலும் போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய, மதுரையைச் பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்த நிலையில், வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் அவனது கைவிரல் மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அவனது உடற்பாகங்கள் தடவியல் சோதனைக்காக சென்னை அனுப்பப்பட்டுள்ள நிலையில் அங்கொட லொக்கா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ரசாயன அறிக்கை வெளியான பிறகே அங்கொட லொக்கா விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா..? அல்லது இயற்கையான மரணம் தானா? என்பது போன்ற தகவல்கள் தெரியவரும்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரையும் 5 நாள் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.