கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 6000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிப்பது மற்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாகவும் 6000 மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று கொசுப்புழுக்கள் பரவாமல் இருக்க அபேட் மருத்துகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.
இதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 6000 மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் கொரோனா வைரஸ் பரவமால் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். அதன் பின் தண்ணீரில் அபேட் மருத்துகளை ஊற்றுவர்கள்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் இருப்பின் அவர்களின் வீடுகளுக்கு சென்று சுற்றி 500மீட்டர் தூரம் வரை மாஸ் கிலினிங் (mass cleaning) என சொல்லக்கூடிய தூய்மை படுத்தும சுகாதார பணியில் ஈடுபடுவார்கள்.
அதேபோல், மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமும் பொது இடங்கள், பூங்கா, கல்லூரிகள், பள்ளிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும், என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனா காய்ச்சல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணிகளுக்காக மட்டும் இதில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 6000த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள மட்டும் அதில் 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்றார்.