கோவை: கோவை மாவட்டம் முழுவதும் நேற்று 14 இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துள்ளது எனவும் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 376.90 மிமீ மழையும், சராசரியாக 26.92 மிமீ மழை பதிவாகியுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், போத்தனூர், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக சாலையில் ஒடியது.
நொய்யல் ஆறு, கோவை குற்றாலம், பவானி ஆறு ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவையில் நேற்று, ஆகஸ்ட் 8 ஆம் தேதி பெய்த மழை அளவு விவரம்:
அன்னூர் 3 மிமீ, கோவை விமானநிலையம்-8.5 மி.மீ., மேட்டுப்பாளையம் 5.4 மி.மீ, சிங்கோனா - 45 மி.மீ., சின்னகல்லார்- 88 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி.-59 மி.மீ., வால்பாறை தாலுகா- 58 மி.மீ. சோலையாறு 41மி.மீ., ஆழியாறு 16, சூலூர் 11மிமீ, பொள்ளாச்சி 13 மி.மீ, கோவை தெற்கு-10 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் 10 மிமீ, வேளாண்மை பல்லைக்கழகம்- 9 மி.மீ. என ஒரே நாளில் 376.90 மிமீ மழை பெய்துள்ளது.