வால்பாறையில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு!

கோவை: வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வால்பாறையில் உள்ள 21-வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு வார்டுகளிலும் கிளைகள் அமைப்பது, கட்சிக் கொடியை ஏற்றுவது, அந்தந்த பகுதியில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.



இக்கூட்டத்தில் சோலையாறு, கல்லாறு, குரங்கு முடி எஸ்டேட், முருகன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி நகர செயலாளர் நெல்லை செல்வம் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு நகர செயலாளர் நெல்லை செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் வால்பாறை அமமுக நகர செயலாளர் செல்வம், செல்வின் லாய், சண்முகம், குமரகுருபரன், கொங்கு மாரிமுத்து, தனலட்சுமி உட்பட ஏராளமான கிளைக் கழக நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...