கோழிக்கோடு விமான விபத்து: நீலகிரியைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளதால் உறவினர்கள் கவலை!

நீலகிரி: கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் நீலகிரியைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களது உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

நீலகிரி: கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் நீலகிரியைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களது உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.



விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துரை கிராமம் பொன் வயல் பகுதியை சேர்ந்த பைசல் பாபு, அவரது மனைவி சாஜிதா மற்றும் கூடலூர் பள்ளிப்படி பகுதியை சேர்ந்த சாஜஹான் என்பவரது மகளான சாதனா சாஜஹான் ஆகிய மூவரும் துபாயில் இருந்து இந்த விமானத்தில் வந்து விபத்தில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...