கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பு 33 குட்டிகளை ஈன்றுள்ளது

கோவை: கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் கருவுற்று இருந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று மாலை 33 குட்டிகளை ஈன்றுள்ளது.








கோவை: கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் கருவுற்று இருந்த கண்ணாடி விரியன் பாம்பு நேற்று மாலை 33 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்த பாம்பை கவனித்து வந்த பூங்கா அதிகாரிகள், பாம்பு குட்டிகளை பரிசோதனை செய்ததில் அனைத்தும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



அதிக நச்சு தன்மை கொண்ட பாம்பு வகையான கண்ணாடி விரியன் பாம்பு குட்டி போடும் வகையை சேர்ந்தது.



வருடத்திற்கு இரு முறை குட்டிகளை ஈனும், இந்த பாம்பு சராசரியாக 30 லிருந்து 40 குட்டிகளை வரை ஈன்றும். ஆனால், இதில் அனைத்து குட்டிகளும் பிழைக்காது, சராசரியாக 20 குட்டிகள் வரை தான் பிழைக்க வாய்ப்புள்ளது.

சாதரணமாக பாம்பு கடித்தால் அதன் விஷத்தன்மை பொறுத்து தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் அது நேரடியாக ரத்த மண்டலத்தை பாதித்து சிறிது நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும், என பூங்கா அதிகாரிகள் கூறினர்.



அதனால் இந்த பாம்பு குட்டிகளை கோவை வனசரகத்திற்கு உட்பட்ட ஆணைக்கட்டி பகுதியில் விடுவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...