கோவை: தூய்மை பணியாளர்களை சாதியின் பெயரை சொல்லி அவதூறாக பேசியதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் தூய்மை தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: தூய்மை பணியாளர்களை சாதியின் பெயரை சொல்லி அவதூறாக பேசியதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் தூய்மை தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நகரின் மையப் பகுதியில் 67வது வார்டு உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒலம்பஸ், சவுரிபாளையம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய பகுதிகளில் தூய்மை படி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் பவுன்ராஜ் என்பவர் பணியிலிருக்கும் தூய்மைப் பணியாளர்களை சாதியின் பெயரில் இழிவுபடுத்தி பேசி வருவதாகவும் பெண்கள் தங்களின் அவசர தேவைக்காக ஏதேனும் வெளியில் சென்றால் கூட அதனையும் மையப்படுத்தி தவறுதலாக பேசி வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இதனை கண்டித்து சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 67வது வார்டு மாநகராட்சி அலுவலகம் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.