கோவை சிங்காநல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர்களில் ஒருவர் கைது

கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர் கூட்டத்தில் ஒருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் டவுசர் கொள்ளையர் கூட்டத்தில் ஒருவரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடைசியில் இருந்தே சந்தன மர கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்தது. இவர்கள் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சிங்காநல்லூர் காவல் எல்லை பகுதிகளில் சுற்றித் திரிவது போன்ற வீடியோக்களும் வெளியானது.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீசார் சிலரை கைது செய்தனர். ஆனால் கைது செய்து சில மாதங்களிலேயே மீண்டும் சிங்காநல்லூர் பகுதிகளில் அதே போன்று இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் மீண்டும் வெளியாகியது.

இப்படி கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள் அரை டவுசருடன் உடம்புகளில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் சிங்காநல்லூர் காவல் எல்லை சூலூர் காவல் எல்லைகளில் சுற்றித் திரிகின்றனர், எனவும், தற்போது அரை டவுசருடன் சுற்றி வரும் இந்தக் கொள்ளையர்கள் வீடுகளில் ஆட்கள் இருக்கும் பொழுதே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்று வருகின்றனர், என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன், பாஸ்கரன், மற்றும் காவலர்கள் ரியாஸ், துர்கா ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு எஸ் ஐ எச் எஸ் காலனியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, குறைவான ஆடையுடன் வீடு புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற கூட்டத்தில் ஒருவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இவர் பெயர் வீரமணி என்பதும் இவர் மீது ஏற்கனவே மூன்று கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவருடன் தொடர்பில் உள்ள கொள்ளையர்களை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...