நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு..!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர், உதகை தமிழக விருந்தினர் மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், கனமழையால் மரம் விழுந்து இறந்த இரண்டு குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியிலிருந்து தலா 4 லட்சம் நிதி உதவி தொகையை அறிவித்தார்.

மேலும், 45 ஆண்டுகளாக நீலகிரியில் வாழும் மலையாள மக்களின் இனமாக இழுவதீயா பிரிவினர்கான சாதி சான்றிதழை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.



அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறும் போது:

நீலகிரியில் கடந்த ஆண்டு மழையின் போது நீலகிரி எம்.பி.ஆ.ராசா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக கூறியிருந்தார். ஆனால், அதெல்லாம் பேச்சோடு சரி, இன்னும் அத்தொகை வந்தபாடில்லை.

நீலகிரியில் வெள்ளத்தால் பாதித்த மின் இணைப்புகளை சீரமைக்க கொடைக்கானலில் இருந்து 40 மின் பணியாளர்கள் நாளை வரவுள்ளதாகவும், அதை தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில் கூடலூர், பந்தலூர் பகுதியில் மின் விநியோகம் சீரமைக்கப்படும்.

மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...