கோவை: பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் லிங்காபுரம் உயர்மட்ட பாலம் மூழ்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் பருவமழையால் நிரம்பி நான்காவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
10,000 கன அடி முதல் 32,000 கன அடிவரை தண்ணீர் உபரியாக பவானி ஆற்றில் திறக்கபட்டு வருவதால், பவானி அணையின் நீர் மட்டமும் மளமளவென உயர்ந்து தற்போது 95 அடியை எட்டியுள்ளது.

இதனால், அணை பகுதி அருகே உள்ள காந்தவயல், லிங்காபுரம் பகுதியினை இணைக்கும் பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது. 30 அடி உயரம் கொண்ட அந்த பாலம் முழுவதும் மூடபட்டு அதற்கும் மேல் தண்ணீரானது தேங்கி வருவதால் அங்குள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமடைந்துள்ளனர்.
காந்தவயல், ஆளூர், உளியூர் கிராமங்களை லிங்காபுரம் பகுதியுடன் இணைக்கும் இந்த பாலம் தற்போது நான்கு புறங்களும் தண்ணீரால் சூழபட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கூட எடுத்து செல்ல முடியாத சூழலுக்கு தள்ளபட்டுள்ள இந்த கிராம மக்கள் ஒவ்வொரு பருவமழையின் போதும் தீவில் வாழ்வது போல உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
5000 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் விவசாய விளைப்பொருட்களையும் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளதால் விரைந்து அரசு பாலம் கட்டிதர உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி கிராம மக்கள்.