கேரளா: வந்தே பாரத் மூலம் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்தது.
கேரளா: வந்தே பாரத் மூலம் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்தது.

இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 191 பேர் --174 பெரியவர்கள், 10 குழந்தைகள், 5 விமான பணி பெண்கள், 2 பைலட்டுகள் பயணம் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட நிலையில், விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் முன் சக்கரம் பழுதானதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில், தற்போது வரை விமானி உட்பட 2 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோழிகோடு விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். கேரள அமைச்சர் ஏ சி மொய்தீன் மீட்பு பணிகளை கவனிப்பார் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்து சம்பந்தமாக கேரள முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய்க்கான அவசர அழைப்பு எண்கள் - 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575