வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் விநியோகம்!

கோவை: வால்பாறையில் கனமழை காரணமாக வீட்டின் மேல் மரம் விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கோவை: வால்பாறையில் கனமழை காரணமாக வீட்டின் மேல் மரம் விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தேயிலை தோட்ட பகுதிகளில் வீடுகளின் மீது மரம் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளான ஸ்டான் மோர், குரங்கு முடி, முருகன் எஸ்டேட், பாரதிதாசன் நகர், வரட்டு பாறை, சோலையார் டேம் சாலை ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்ததின் காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில், அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறிய வால்பாறை அ.இ.அ.தி.மு.க.நகர கழக செயலாளர் மயில் கணேசன், நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும், மழைக்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆர். நரசப்பன், கழக வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், அம்மா பேரவை துணை தலைவர் சி .செந்தில் பாலு, பாசறை இணைச் செயலாளர் ஏ. சௌந்தரராஜன், எஸ்.கே.எஸ்.பாலு, சண்முகம், லோகேஸ்வரன், ஜோதி கார்த்தி, ஜான் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...