திராவிட கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைவது, தமிழகத்தில் பாஜக முக்கியத்துவம் பெற்று வருவதை பிரதிபலிக்கிறது - வானதி சீனிவாசன்

கோவை: திராவிட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவில் இணைவது என்பது தமிழகத்தில் பாஜக முக்கியத்துவம் பெற்று வருவதை பிரதிபலிப்பதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: திராவிட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவில் இணைவது என்பது தமிழகத்தில் பாஜக முக்கியத்துவம் பெற்று வருவதை பிரதிபலிப்பதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7ம் தேதி கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நான்காவது ஆண்டாக கைத்தறி ஆடைகளுக்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்கனவே ஆன்லைனில் இதற்கான போட்டி நடத்தப்பட்ட நிலையில், இறுதிச்சுற்றானது இன்று பீளமேடு பகுதியில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.



அப்போது, கண்கவர் கைத்தறி ஆடைகளை அணிந்து வந்த மாணவ, மாணவிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கைத்தறி ஆடைகளுக்கான விழிப்புணர்வை ஒரு புறம் அரசாங்கம் மேற்கொண்டு வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கோவை மக்கள் சேவை மையம் கைத்தறி பேஷன் ஷோ என்று சொல்லக்கூடிய ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், திராவிட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் பாரதிய ஜனதாவில் இணைவது என்பது தமிழகத்தில் பாஜக முக்கியத்துவம் பெற்று வருவதையே காட்டுகிறது என்று கூறினார்.

பின்னர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஏற்கனவே போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகள் தற்போது சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...