கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் வழியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் 43 வயது பெண் மேலாளர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார். பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து, சுகாதாரத் துறையினர் மூலம் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும், வங்கி மேலாளருக்கு தொற்று உறுதியானதால் வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைக்கு அனுமதிக்கப்படவில்லை. பின்னர் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.
வரும் திங்கட்கிழமை முதல் வங்கி வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.