ரூ.70 லட்சம் மதிப்பில் புது பொலிவுடன் கோவை பூமார்க்கெட்; சுதந்திர தினத்தன்று பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்டும் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.








கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்டும் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பூமார்க்கெட்டில் 95க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பெங்களூரு, திண்டுக்கல், சத்தியமங்கலம், சிறுமுகை, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த பூக்கள் வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 25ம் முதல் மூடப்பட்ட பூமார்க்கெட் வளாகம், கடந்த மே 10ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், சமூக இடைவெளி மீறல் காரணமாக பூமார்க்கெட் வளாகத்திற்கு, கடந்த ஜூன் 19ம் தேதி, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து, இங்கு செயல்பட்டு வந்த 95 கடைகள், தேவாங்கர் பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பூமார்க்கெட்டில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரிகளுக்காக, பழைய பூமார்க்கெட் இருந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 கடைகள் கட்டும் பணியானது துவங்கப்பட்டு, நடந்து வருகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியாதாவது:

மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்டப்பட்டு வரும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இங்கு 6 அடிக்கு 3 அடி என்ற அளவில் 95 கடைகள், போதிய இடைவெளியுடன் கட்டப்பட்டுள்ளன. வரும் 15ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது, என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...