வால்பாறையில் பெய்த தொடர் கனமழையால் சோலையார் அணை மூன்றே நாளில் 38 அடி உயர்வு - முழு கொள்ளளவை எட்டியது!

கோவை: வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்ததால் சோலையார் அணை மூன்றே நாளில் 38 அடி கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

கோவை: வால்பாறையில் வரலாறு காணாத மழை பெய்ததால் சோலையார் அணை மூன்றே நாளில் 38 அடி கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது. அக்காமலை புல்வெளியை ஒட்டியுள்ள நீரார் அணையில் சேகரிக்கப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலம் சோலையார் அணைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப்பின் பரம்பிகுளம் அணைக்கு சென்று அங்கிருந்து ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணை வழியாக பொள்ளாச்சி உடுமலை, தாராபுரம், பல்லடம் மற்றும் கரூர் வரை குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளுக்கு பயன்படுகிறது.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.



இதன் காரணமாக நடுமலை ஆறு, புதுத்தோட்டம் ஆறு மற்றும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.



165 அடி உயரமுள்ள சோலையார் அணை நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 118 அடி இருந்த நிலையில் இன்று காலையில் 38 அடி உயர்ந்து 157 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 231 மி.மீட்டர், சின்னகல்லாரில் 305 மி.மீ. நீரார் அணையில் 210 மி.மீ, சோலையார் அணையில் 248 மி,மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர். வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் வெள்ளம் ஏற்பட்டுள்ள வாழைத்தோட்டம் ஸ்டேன் மோர், வெள்ளமலை மட்டம் மற்றும் சோலையார் அணைப் பகுதிகளை பார்வையிட்டனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பொழுது உதவிக்காக அதிரடிப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...