கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள, சர்க்கார்பதி, கூமாட்டி, நவமலை உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள், மின்சார பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அப்பர் ஆழியாறு அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நவமலை செல்லும் தரைமட்ட பாலத்திற்கு மேல் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் மலைவாழ் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் வேலை இல்லாமல் மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வரும் சூழலில், தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, வாடகை வாகனம் ரூ 500 முதல் 1000 வரை தந்து அருகில் உள்ள கோட்டூர் பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
பாலத்தை உயர படுத்தினால் மட்டுமே நிரத்த தீர்வு எனவும், மழை இதே நிலை நீடித்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் என மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர், கடந்த வருடம் பெய்த மழையால் 15 நாட்கள் மேல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.