முதலீடு செய்த பணத்தையாவது திரும்ப எடுக்க கொட்டும் மழையில் வெங்காயத்தை அறுவடை செய்து வரும் கோவை விவசாயிகள்..!

கோவை: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் அனைத்து நீர் நிலைகள் மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி வருகின்றன.


கோவை: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் அனைத்து நீர் நிலைகள் மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி வருகின்றன. 

கடந்த 4 நாட்களாக நொய்யல் ஆற்று நீர் பிடிப்பு பகுதியான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மழை என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி தான் அதிலும் விவசாயிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆனால், கோவை தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் இந்த மழையினால் பயனை விட பாதிப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளனர். 



தீவிர மழையால் வாழைமரங்கள் சாய்ந்துள்ளன, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி போயின.குறிப்பாக சிறுவாணி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூழுவப்பட்டி, நரசீபுரம் போன்ற இடங்ககளில் பாதிப்புகள் அதிகம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இரு நாட்களாக சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அதிலும் வாழை, பாக்கு மரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும், இந்த மாதம் தான் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் நேரத்தில் இது போன்ற நிகழ்வு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

"இன்னும் 5 -10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காய செடிகள் எல்லாம் மூழ்கின. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெங்காயம் அதிக ஈரத்தன்மை அடைந்து அழுகும் நிலை ஏற்பட்டள்ளது", என்று தெரிவிக்கின்றனர் விவசாயிகள். 

இது குறித்து, சிறுவாணி விழுதுகள் அமைப்பை சார்ந்த ராம் குமார் அவர்களிடம் பேசினோம்: 

வரும் மாதங்களில் தான் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் இப்போது பெய்த மழையால் அனைத்தும் செடிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அறுவடைக்கு முன்னரே சில விவசாயிகள் 70 முதல் 85 சதவீதம் வரை வளர்ந்துள்ள சின்ன வெங்காயத்தை அவர்கள் முதலீடு செய்த பணத்தையாவது திரும்ப எடுக்க வேண்டும் எண்ணத்தில் கொட்டும் மழையில் அறுவடை செய்து வருகின்றனர்.

மேலும், இவற்றை இருப்பு வைத்துக்கொள்ளவும் முடியாமல் வியாபாரிகள் கேட்கும் விலைக்கே விற்க தொண்டாமுத்தூர் சார்ந்த விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் வெங்காயம் இருப்பு இல்லாததால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இங்குள்ள விவசாயிகள் வாழை, சின்ன வெங்காயம் போன்ற பயிர்களில் முதலீடு செய்துள்ளதால் மழையால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வேளாண் அதிகாரிகள் கணக்கீடு செய்த பின்னரே சேதம் எவ்வளவு என்று சொல்லமுடியும் என்று கூறினார்.

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் விளை பொருட்களை விற்க முடியாத நிலையில், இந்த நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவது என்ற மனவதனையில் கோவை விவசாயிகள் உள்ளனர் என்பது தான் நிதர்சனம். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...