கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனிடையே நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு 1421 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதாவது சராசரியாக 101.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், போத்தனூர், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சாலைகளில் ஒடியது.
சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நொய்யல் ஆறு மற்றும் கோவை குற்றாலத்தில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய செடிகள் முற்றிலும் நீரில் மூழ்கின. மழையுடன் அசுர வேகத்தில் காற்று வீசி வருவதால், வாழை மரங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவையில் பெய்த மழை அளவு விவரம்:
கோவை விமானநிலையம்-4 மி.மீ., மேட்டுப்பாளையம் 3.2 மி.மீ, சிங்கோனா - 290 மி.மீ.,சின்னகல்லார்-305 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி.-231 மி.மீ., வால்பாறை தாலுகா-230 மி.மீ. சோலையாறு-248 மி.மீ., ஆழியாறு 42.6, சூலூர் 17மிமீ, பொள்ளாச்சி 32.6 மி.மீ, கோவை தெற்கு-7 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் 3 மிமீ, வேளாண்மை பல்லைக்கழகம்- 5 மி.மீ. என ஒரே நாளில் 1421 மிமீ மழை பெய்துள்ளது (சராசரி 101.5 மிமீ மழை பதிவு).