கோவை: கோவை தடாகம் பகுதி காளையனூரில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இளைஞர்கள் நான்கு பேர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்புறத்தில் இருந்த சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
கோவை: கோவை தடாகம் பகுதி காளையனூரில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இளைஞர்கள் நான்கு பேர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் எதிர்புறத்தில் இருந்த சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் இளைஞர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரேஷ்.(22) இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இண்டர்நேசனல் பிசினஸ் படித்து வருகிறார். இந்நிலையில், இந்திரேசின் நண்பர் வெங்கடேஷ் என்பவரின் பிறந்தநாள் விழா கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.
இதற்கு தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்றுள்ளார்.பிறந்த நாளை கொண்டாடி விட்டு, அதிகாலையில் ஆனைக்கட்டி சாலை வழியாக திரும்பி வந்துள்ளனர்.
அப்போது, இந்திரேஷ் அதிவேகமாக கார் ஒட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காளையனூர் பகுதி அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துள்ளானது.

இதில் இந்திரேஷ், பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜூ, கஸ்தூரி நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் ஹரி, வட கோவையை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த வடகோவையை சேர்ந்த பிரஜேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தடாகம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் நான்கு பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தடாகம் காவல்துறையினர், அந்த இளைஞர்கள் யார் யார் எங்கிருந்து வந்தனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது இந்த விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.