கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம்; தாயும் சேயும் நலம்

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இரு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இரு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவனையில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற 24 கர்ப்பிணி பெண்களுக்கு 14 ஆண் குழந்தைகளும், 10 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவையைச் சேர்ந்த 22 வயது மிதக்கத்தக்க கர்ப்பிணி பெண் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் தலைமையிலான மருத்துவர் குழு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவருக்கு இரண்டரை கிலோ எடையுள்ள ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண்ணும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொறோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் 2.7 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆரோக்கியமான முறையில் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...