கோவை: சிறுமுகை வனப்பகுதியில் அடுத்தடுத்து யானைகளின் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை நியமித்துள்ள சிறப்பு குழு ஆய்வை இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களில் பத்து யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழந்த யானைகள் அனைத்தும் உடல்நலம் பாதிக்கபட்டு, உணவு உட்கொள்ள உடல் மெலிந்து ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்ததால் யானையின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது புரியாது புதிராகவே இருந்துள்ளது.
குறிப்பாக, வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், வனத்துறையினர் குழு அமைத்து தொடர் யானைகளின் மரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, சிறுமுகை வனப்பகுதியில் யானைகளின் உயிரிழப்பை கண்டறிய கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டது, இன்று அந்த குழுவினர் அவர்களது ஆய்வினை துவங்கியுள்ளனர்.

அந்த குழு யானைகளின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது, குழுவிற்கு நான்கு பேர் என ஜந்து குழுக்களாக பிரிந்து யானைகள் உயிரிழந்த பகுதிகளில், குறிப்பாக சிறுமுகை வனச்சரக பகுதியான பெத்திகுட்டை, உளியூர், கூத்தாமண்டி வனப்பகுதிகளில் யானைகள் உட்கொள்ளும் உணவு, தண்ணீர், சாணம் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சிறுமுகையில் பவானி ஆற்று பகுதியில் மூடிய நிலையில் உள்ள ஆலைக்குள் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால், அங்குள்ள நச்சு பொருட்களை ஏதாவது யானைகள் உட்கொள்கிறதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரனையில் இறங்கியுள்ளனர்.
இன்று அந்த ஆலை வளாகத்தில் நுழைந்த வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்குள்ள பகுதிகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.