கோவை: தூய்மை பணியாளர்களின் நலனை வலியுறுத்தி அகில இந்திய தொழிற் சங்க மய்யக் கவுன்சில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று நாடெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
கோவை: தூய்மை பணியாளர்களின் நலனை வலியுறுத்தி அகில இந்திய தொழிற் சங்க மய்யக் கவுன்சில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று நாடெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை பல்வேறு கட்ட போராட்டங்களின் மூலம் அரசுக்கும், தங்களுக்கும், கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மனுவாக அளித்தும், எந்த நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.
மேலும், இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென அகில இந்திய தொழிற் சங்க மய்யக் கவுன்சிலின், கோவை மாவட்ட செயலாளர் லூயிஸ் கே.தாமஸ் தெரிவித்துள்ளார்.
கீழ் கண்ட கோரிக்கைகளை அவர்கள் அமைப்பு சார்பாக வைத்துள்ளனர்:
1. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு 2017ல் அறிவித்த அரசாணைப்படி குறைந்தபட்ச சம்பளமான ரூ.17 ஆயிரத்தை, 2017 முதல் நீலுவைத் தொகையுடன் அளிக்க வேண்டும்.
2. கொரோனா காலத்திற்கான மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான சிறப்பு சம்பளத்தை மார்ச் மாதம் முதல் ஜலை வரை முழு சம்பள அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும். கொரோனா நோயத் தொற்றிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.
3. ஒப்பந்த தூய்மை பணியாளர்களை உடனடியாக நிரந்தரமாக்கி. உச்ச நீதி மன்ற உத்தரவின்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
4. கோவை மாநகர பகுதிக்குள்ளேயே அனைவருக்கும் குடியிருப்பு வழங்க வேண்டும்.
5. தொழிலாளர் நலன் கருதி முன்பிருந்த வேலை நேரத்தை அமல் படுத்த வேண்டும்.
6. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து தூய்மை பணியாளருக்கும், ரூ.50 லட்சம் கொரோனா நோய்தொற்று, விபத்துக் காப்பீட்டை தமிழக அரசே செலுத்தி மருத்துவக் காப்பீடு கிடைக்கும்படி செய்து தர வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.