நீலகிரி: நீலகிரி மாவட்டடத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அவலாஞ்சி, கூடலூர், மஞ்சூர், கீழ் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கன மழைப் பெய்து வருகிறது.

இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று எமரால்டு பகுதியில் திடீரென மேச்சல் நிலம் சரியத் துவங்கியது. சுமார் 200 முதல் 300 அடி வரை இந்த நிலம் விரிசல் ஏற்பட்டு அடித்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் 15 மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் மழை நின்றதும் இப்பகுதியில் ஆய்வு மேற்காெள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.