கோவையில் பூட்டிய வீட்டில் தீ காயங்களுடன் மீட்கபட்ட பெண் மரணம்; ஆர்.டி.ஓ விசாரணை

கோவை: கோவையில் பூட்டிய வீட்டில் தீ காயங்களுடன் மீட்கபட்ட பெண் மரணமடைந்ததை அடுத்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் பூட்டிய வீட்டில் தீ காயங்களுடன் மீட்கபட்ட பெண் மரணமடைந்ததை அடுத்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை சுந்தராபுரம் சிட்கோ ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு டேனியல் (34) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஊட்டியை சேர்ந்த ஜான்சி (30) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்ளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இன்று மதியம் ஜான்சியின் வீட்டில் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் பூட்டி இருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பலத்த தீ காயங்களுடன் ஜான்சி உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று உள்ள நிலையில் ஜான்சியை பரிசோத்கித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜான்சியின் மாமியார் ரோசி (70)க்கும் ஜான்சிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என சொல்லபடுகிறது. மேலும், ஜான்சியின் வீட்டில் எரிவாயு மட்டுமே உள்ளது என்றும், மாமியார் ரோசி மட்டுமே மண்ணெண்ணெய் வாங்க முடியும் என்ற நிலையில், இறந்து போன ஜான்சியின் முகம் மற்றும் முன்பகுதியில் தீ காயங்கள் ஏற்பட்டு இறந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இன்று மதியம் 12.15 மணியளவில் ஊட்டியில் உள்ள தனது பெற்றோரை ஜான்சி தொடர்பு கொண்டு ஊருக்கு வருவதற்கு இ பாஸ் ஏற்பாடு செய்யுமாறு கேட்டு உள்ளார்.

இந்நிலையில் 12.30 மணியளவில் உடலில் தீ காயம் ஏற்பட்டு மரணமடைந்ததால் சாவில் மர்மம் இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் ஜான்சி-பிரபு டேனியல் இருவருக்கும் திருமணமாகி நான்கரை வருடம் தான் ஆகியுள்ளது என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரைனை நடத்த உள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...