இஎஸ்ஐ மருத்துவமனையில் 2.40 கோடி மதிப்பிலான சிடி ஸ்கேன் எந்திரத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார்.








கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செவிலியர் துறையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான சிடி ஸ்கேன் பரிசோதனை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்:

கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் இஎஸ்ஐ மருத்துவமனை மூலம் மூன்று மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், 5,550 பேருக்கு சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 3,023 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் மட்டும் 2,586 பேருக்கு தற்போது வரை சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தற்போது புதிதாக துவங்கப்பட்ட சிடி ஸ்கேன் மூலம் நோயின் ஆரம்பத்திலேயே அறிய முடியும் எனவும் இது தற்போது அத்தியாவசியமான ஒன்று என்பதால் இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லபட்ட நிலையில், இதனை மருத்துவமனைக்கு முதல்வர் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த சி.டி.ஸ்கேன் கருவி மூலம் நாளொன்றுக்கு 100 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் அதிக அளவிலான பரிசோதனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கொரோனா தொற்றுக்கு 96 கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இதில் அறுவை சிகிச்சை மூலம் 25 தாய்மார்களுக்கு குழந்தை பிறந்துள்ளது எனவும் இந்த குழந்தைகளுக்குப் தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிவித்தார்.

இதுவரை 19 தாய்மார்கள் குழந்தையுடன் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மேலும் நோய்த்தொற்றுடைய 8 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், குழந்தைகள் நல பிரிவில் 892 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு 666 குழந்தைகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் நோய் தொற்றுடைய 26 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள 450 படுக்கைகளில், 240 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி இருந்த நிலையில் தற்போது இது 340 படுக்கைகளாக அது மாற்றப்பட்டுள்ளது. அவை, தற்போது 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட தனி வார்டில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையில் மாவட்டத்தில் இறப்பு சதவீதம் 1.58 என்ற அளவில் தான் உள்ளது எனவும் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன்,மேற்கு மண்டல காவல் துறை தலைவர், மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...