கோவை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினரிடம் இந்திய உளவு அமைப்பான ரா புலனாய்வு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு அங்கொட லொக்கா தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கட லொக்கா அவனது காதலி எனக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த அமானி தான்ஜி அவனுக்கு குடியுரிமையை மறைத்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இந்தியாவில் பெற உதவியதாக, மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி ஐஜி சங்கர் இந்த வழக்கை விசாரிக்க 7 தனிப்படைகள் டிஎஸ்பி ராஜூ தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக, கோவை காளப்பட்டியில் அங்கொட லொக்கா மற்றும் அவனது காதலி அமானி தான்ஜிடன் வசித்து வந்ததாக கூறப்படும் வீட்டில், டிஎஸ்பி ராஜு தலைமையில் 10 சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டர். இதேபோல திருப்பூர் மற்றும் மதுரையில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் அங்கொட லொக்காவின் சர்வதேச தொடர்புகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான "ரா" புலனாய்வு அமைப்பை சேர்ந்த 5 அதிகாரிகள் கோவையில் ஐஜி சங்கர் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு அங்கொட லொக்கா தொடர்பான விவரங்களை பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் உயிரிழந்தது லொக்கா என்பதை தானா..? என்பதை உறுதி செய்ய உடற்கூறாய்வின் போது பரிசோதனைக்காக உடலிலிருந்து எடுக்கப்பட்ட இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் ஆகிய உறுப்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், லோக்கவிற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் வங்கி கணக்குகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி பணப்பரிவர்த்தணை நடைபெற்று உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சர்வதேச அமைப்பான இண்டர்போல் கடந்த 2019ஆம் ஆண்டு அங்கொட லொக்காவை தேடப்பட்டு வரும் நபராக ரெட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.