மழை வந்து என்ன பயன்..? வாய்க்கால்களை சரிவர தூர்வாரததால் சாக்கடை கலந்த நீரை விவசாயத்திற்கு எப்படி பயன்படுவது....? - சூலூர் ஒன்றியம் விவசாயிகள் கேள்வி

கோவை: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏரிகள், குளங்கள் நிறைந்து வருகின்ற நிலையில் நொய்யலில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏரிகள், குளங்கள் நிறைந்து வருகின்ற நிலையில் நொய்யலில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து வருவதால் நொய்யலின் பாதையில் பல இடங்களில் ஆற்றில் நுரை போன்ற படலம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, நொய்யல் ஆற்றின் கிளை வாய்கால்களை சரிவர தூர்வாரரதால் 400 ஏக்கர் விவசாயம் நிலம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக சூலூர் ஒன்றியம், ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

முத்துக்கவுண்டன் புதூர் மாசணியம்மன் கோவில் அருகில் தான் நொய்யல் தடுப்பணை உள்ளது. அங்கிருந்து துவங்கும் கிளை வாய்க்கால் வழியாக ராசிப்பாளையம், அருகம்பாளையம், பகுதிகளை அடைந்து மீண்டும் நொய்யலில் கலந்துவிடுகிறது. நீர் வரும் பகுதியில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருப்பதால் புதர் மண்டி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவ்வூரை சேர்ந்த விவசாயி ஒருவரை கேட்ட போது, இரு மாதங்களுக்கு முன்னர் பாலம் கட்டுவதற்காக தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்தனர். அந்த பணியுடன் சேர்த்து வாய்க்கால்களை சரி செய்யப்படும் என பொதுப்பணித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சரி செய்யப்படவில்லை, என்றார்.

மேலும், ஆற்றுநீருடன், சாக்கடை சேர்ந்து குட்டை போன்று காட்சியளிக்கிறது. இது குறித்து பஞ்சாய்த்து தலைவரிடம் கூறி வருகிறோம். அவர்களும் பொதுப்பணித்துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

பொதுப்பணித்துறையோ தூர்வார போதிய நிதி இல்லை என்று பதில் அளித்து வருகிறார்கள். மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை வைத்து தான் விவசாயம் செய்து வருகிறோம். ஆண்டு முழுவதும் சாக்கடையாக வரும் நொய்யலில் இப்பொழுது தான் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.

குறிப்பாக, ராசிப்பாளையம் முதல் பிள்ளையார் கோவில் வரை தூர் வாரி ஷர்ட்டர் பழுது நீக்கி, மண் மேடுகளை சரி செய்தால் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும், என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...