திருப்பூர்: திருப்பூரில் விவசாய விளை நிலங்கள் வழியே உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விருதுநகர் முதல் கோவை வரை 765 கிலோவாட் மின் கோபுரம் அமைக்கும் பணி ஊத்துக்குளியில் உள்ள காவுத்தம்பாளையம் வழியே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும்பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விவசாயம் பெரும் அளவில்பாதிக்கப்படும் அவலம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், சாலையோரத்தில் புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.