கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், நேற்று ஒரே நாளில் அணை பகுதியில் 200மிமீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 24.11 யில் இருந்து 28.44 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.
கோவையில் தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 28.44 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 300 மிமீ மழை அணை பகுதியில் பெய்துள்ள நிலையில் நேற்று 200 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சி சார்பாக சிறுவாணியில் இருந்து 101 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது," என்றார்.