கோவை: கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சேர்ந்தவன் சந்தோஷ் (23). தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை செய்துவருகிறார்.

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ள நிலையில், நேற்று அந்த சிறுமியை வெளியில் செல்லலாம் வா, என கூறி கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதிக்கு கூட்டி வந்துள்ளான்.
அங்கு ஏற்கனவே காத்திருந்த பிரபு நகரைச் சேர்ந்த தனது நண்பன் சதீஷ் என்பவனுடன் சேர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அருளரசு உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளான சந்தோஷ் மற்றும் சதீஷ் இருவரையும் கைது செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டஇருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.