ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம் - சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம் என திருப்பூரில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர்: ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம் என திருப்பூரில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், திருப்பூரிலிருந்து அயோத்திக்கு கரசேவைக்கு சென்றவர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது நாடெங்குமுள்ள நீதியை விரும்பக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக ஆதரிக்காதது குறித்த கேள்விக்கு, அதிமுக-பாஜக வெவ்வேறு அரசியல் இயக்கங்கள் கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம் ஆனால், புதிய கல்விக் கொள்கை தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கக் கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்தார். 



மேலும், ஆங்கிலேயர்களின் அருவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம், ஆனால் தமிழகத்தில் தற்போது வரை ஆங்கில மொழி என்ற ஒரு மொழிக் கொள்கையே இருந்து வருவதாகவும், பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களே தெரியாத வகையில் இருக்கும் சூழ்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று உரக்கச் சொல்கிறது. புதிய கல்விக் கொள்கைஇதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய புதிய கல்விக் கொள்கையை வரவேற்காமல் வசை பாடுபவர்கள் நிலை குறித்து காலம் பதில் சொல்லும் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...