கோவை: கோவை நஞ்சப்பா சாலையில் பிக்கப் வேன் வாகனத்தில் திடீரென தீ பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை நஞ்சப்பா சாலையில் பிக்கப் வேன் வாகனத்தில் திடீரென தீ பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காமநாய்க்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் பட்டாசு திரிகளை சிவகாசிக்கு பார்சல் அனுப்ப பிக்கப் வேன் மூலம் காந்திபுரம் பகுதிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நஞ்சப்பா சாலையில் வந்த போது, வாகனத்தின் முன்புறம் புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து, உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். இருப்பினும் வாகனத்தின் முன்பக்கம் தீ பற்றி எறிய துவங்கியது. லேசான தீ வாகனத்தில் பற்றிய நிலையில் இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் வாகனங்களை தள்ளி சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வரும் நஞ்சப்பா சாலையில் வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.