கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணை நேற்று தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டது
நேற்று 22,000 கன தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
இதனையடுத்து, நேற்று மாலை சற்று நீர்வரத்து குறைந்து 12,000 கன அடியாக இருந்த நிலையில், இரவு மீண்டும் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, அட்டப்பாடி போன்ற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, இரவு முதல் மீண்டும் பில்லூர் அணைக்கான நீர்வரத்து 17,000கன அடியாக உயர்ந்தது. இதனால் தற்போது அணையில் இருந்து 17,000 கன அடி தண்ணீர் விநாடிக்கு உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது
இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக இன்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனிடையே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 17,000 கன அடியாகவும் அதனை அப்படியே உபரியாக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.