திருப்பூர்: தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளதால், மாநிலம் முழுவதும் 6,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு, பதவியுயர்வு, உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே, தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்பபெறக் கோரியும், கொரோனா பொது முடக்கம் காரணமக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை கைவிட கோரியும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.