கோவை நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மக்கள் அவதி

கோவை: கோவை நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை: கோவை நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை நொய்யல் ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. 

இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்துப்பாலம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், போத்தனூர் ஜம் ஜம் நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் வெள்ள நீர் குடியிருப்பிற்குள் புகுந்தது. 

மேலும், போத்தனூர் சாய்நகரில் உள்ள 10 தெருக்களுக்குள் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர். அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...