தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

திருப்பூர்: தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

திருப்பூர்: தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். 

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நீதி மன்றங்கள் செயல்பட முடியாத சூழ்நிலை நீடித்து வருகிறது. 

முக்கியமான வழக்குகள் மட்டும் ஆன்லைன் மூலம் நடந்து வரும்.நிலையில், வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைகளை ஏற்று தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீதிமன்றங்களை திறக்கவேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், 3 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் சார்பு நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...