கோவை: மழை பெறுவதற்காகவும், சுற்றுசூழலை காப்பதற்காகவும் காடுகளிலும் அதன் எல்லைகளிலும் மரங்களை நட்டு அதை அரசாங்கம் பாதுகாத்து வருகிறது.

உண்மையில் காடுகளில் உள்ள மரங்களை யார் பாதுகாக்கிறார்கள் யார் என்று பார்த்தால், அங்குள்ள வன விலங்குகள் தான்.
டொக் டொக் பறவை...!
ஒரு மர ஆசாரி (Carpenter) மர வேலை செய்வதை போல எப்போதும் கொத்திக்கொண்டே இருக்கும், மரங்கொதிப் பறவைகள் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்துகிறது.
மரங்களில் உள்ள புழு, பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றை உண்டு மரத்தினை செழுமை படுத்தும் பல பறவைகளுக்கு மத்தியில், மரங்களுக்கான டாக்டர் என்று மரங்கொத்தி பறவை ஏன் சொல்லபடுகிறது..?
மரங்கொத்தி என்று சொன்னாலே உடனடி நியாபகத்திற்கு வருவது டொக் டொக் என்கிற சத்தம் தான். அவைகள் அதிக அளவில் வாழும் காடுகளில் இந்த டொக் டொக் இடைவிடாது ஒலிக்கும்.
காகம், பச்சை கிளி போன்ற பறவைகளுக்கு மத்தியில் மரங்கொத்திகளுக்கு தனித்த குரல் கிடையாது. அதன் கொத்தும் திறனை வைத்து தான் ஓசையை எழுப்புகிறது.
ஏன் மரங்களில் துளையிடுகிறது..?
ஏன் இப்படி மரங்களில் துளையிடுகிறது என்று சிலர் ஆச்சரயத்துடன் பார்ப்பார்கள். ஓ...மரங்களில் துளையிட்டு அவை வாழப்போகிறது என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால், மரங்கொத்திப் பறவைகள் எதற்காக மரங்களையும் அதன் பட்டைகள் ஆகியவற்றை கொத்தி பெயர்கிறது என்று பார்த்தால், அது தன் உணவிற்காக அதில் உள்ள பூச்சிகளை, கரயான்களை உட்கொள்ளவே அவ்வாறு செய்கிறது.
நாக்கின் நுனியில் பசை போன்ற திரவியத்தில் ஒட்டி கொள்ளும் இரை 14 சென்டி மீட்டர் உடைய நாக்கை கொண்டு பொந்தினுள் இருக்கும் பூச்சிகளையும், புழுக்களையும் தேடிப்பிடிக்கிறது இந்த மரங்கொத்திப் பறவைகள். இப்பறவை பொதுவாக துளையிடுவதற்கு பைன் (pine) மரத்தையே தேர்வு செய்கிறது.
அதன் நாக்கின் நுனியில் பசை போன்ற திரவியம் காணப்படுவதால், இரை எளிதாக ஒட்டிக்கொள்கிறது. அதற்கு ஏற்றாற்போல் அதனுடைய உடல் தகவமைப்புகளும் அமைந்து இருக்கிறது.
நீண்ட நேரத்திற்கு, கீழே விழாமல் எப்படி மரங்களை துளையிட முடிகிறது..?
உலகில் உள்ள அனைத்து பறவைகளுக்கு ஓரே மாதிரியான தகவமைப்புகளை கொண்டிருக்கலாம். குறிப்பாக ஒரு பின்னோக்கிய விரலும், மூன்று முன்னோக்கிய விரலும் இருக்கும்.
ஆனால், மரங்கொத்தி பறவைகளுக்கு நன்கு வளைந்த நகங்களுடன், இரண்டு விரல்கள் முன்னோக்கியும், இரண்டு பின்னோக்கியும் இருக்கும். இத்தகவிமைப்பினால் உயரமான மரத்தில் நீண்ட நேரத்திற்கு கொத்திக்கொண்டிருக்கும்போது கீழே விழாமல் தற்காத்துக் கொள்கிறது.
ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்தும்.
அதனுடைய, அலகு மிகவும் கூர்மையானதாகவும், வலிமையானதாக இருப்பதால் மரங்களை துளையிட பெரிதும் உதவுகிறது.
ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்துவதால், மரத்திலிருந்து ஏராளமான தூசிகள் வெளிப்பட்டு அதன் நாசி வழியே செல்கிறது. அதில் இருந்து பாதுகாக்க,
இவைகளின் மூக்கின் மீது அதிகமான ரோமங்கள் வளர்ந்து இருக்கிறது.
இவற்றின் மூலம் காற்றை மற்றும் சுவாசித்துக்கொண்டு மரத்துகளை வெளியேற்றுகிறது. இயற்கையான வடிகட்டி போல தகவமைப்பு பெற்றிருப்பது ஆச்சரியம் தான். அதனுடைய கண்கள், எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றிற்கு எவ்வித பாதிப்போ, அதிர்வோ ஏற்படுவதில்லை.
ஒரு சில சமயத்தில் அதன் உடல்,வால் ஆகியவை மரத்துடனே ஒட்டிக்கொள்வதால் அதிக நேரத்திற்கு அதன் வேலையை தங்கு தடையின்றி செய்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மரங்கொத்தி அடர்வனப்பகுதிகளில் அதிகம் வாழுகிறது. இடத்திற்கு இடம் அதனுடைய பெயர்களும் மாறுப்படுகிறது. இவை பிசிடேட் என்ற குடும்பத்தை சார்ந்தவை. பொன்முதுகு மரங்கொத்தி பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குன்னூர், பர்லியார், அடர்லி போன்ற அடர்ந்தவனப்பகுதியில் காணப்படுகிறது.
மரங்கொத்திகள் அடர்ந்த காடுகளில் உள்ள மா, வாகை, முருங்கு, பைன், வன்னி போன்ற மரங்களை தேர்வு செய்து பொந்து அமைத்து, 2 முதல் 3 முட்டைகள் இடும்.
மரங்கொத்தி வகைகள்
புள்ளி மரங்கொத்தி (Speckled Piculet), சின்ன மரங்கொத்தி (Brown Capped Pygmy Woodpecker), மஞ்சள்நெற்றி மரங்கொத்தி (Yellow Crowned Woodpecker), பெரிய கருபு மரங்கொத்தி (White Beiled Woodpecker), மஞ்சல் பிடரி மரங்கொத்தி (Lesser Yellownape), செதில் வயிற்று மரங்கொத்தி (Streak Necked Woodpecker), பொன்முதுகு மரங்கொத்தி (Lesser Golgenback), கருஞ்சிவப்பு மரங்கொத்தி (Rufous Woodpecker), பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (Greater Golden Back), கரு முதுகு மரங்கொத்தி (White Naped Woodpecker), கரும்புள்ளி மரங்கொத்தி (Heart Spotted Woodpecker) போன்றவை மரங்கொத்திகளின் வகைகள் ஆகும்.