நுரை தள்ளும் நொய்யல்: ஆற்றங்கரையில் உருவானது நம் நாகரிகம்; இப்படியே போனால் நாளை ஆறே இருக்காது..!

கோவை: தென்மேற்கு பருவ மழையால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கட்டுகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.


கோவை: தென்மேற்கு பருவ மழையால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கட்டுகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும மழையால், பில்லுர் அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டவிருப்பதால், அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டுகிறது. 

அதனால், பாவனி ஆற்றங்கரை ஓரத்தில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே போல், நொய்யல் ஆற்றுப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஆற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. 

நுரை தள்ளும் நொய்யல்..! 

மழையால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் மக்கள் வீடுகளில் வாழ அஞ்சுவதை பார்த்திருப்போம்.ஆனால் இங்கு சிறிது வித்தியாசமாக, ஆற்றில் நுரை ஏற்பட்டால் என்ன செய்வது என்று நொய்யல் செல்லும் பாதையில் வாழும் மக்கள் அஞ்சுகின்றனர். 

இதற்கு காரணம் என்ன...? 

சுத்தமான நீர் ஆதாரமான ஆற்றுநீரை, கழிவு நீராக தான் வருடா வருடம் பார்க்க முடிகிறது என்று கவலை பட சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நொய்யலில் பெரும்பாலும் சாக்கடை மற்றும் சாயக்கழிவுகள் தான் கலக்கப்படுகிறது. நகரமயமாக்கல் விளைவாக அதிகப்படியான குடியுறுப்புகள் ஒரே இடத்தில் இருப்பதாலும் அங்கிருந்து வெளிவரும் சாக்கடை கழிவுகள், சுத்திகரிக்கப்படாத நிலையில் அப்படியே ஆற்றிலிலே விடப்படுது தான் எந்த மாசுக்கு காரணம் என கூறப்படுகிறது. 



கோவை பிரதான இடங்களில் சாயப்பட்டறைகள் பகல் நேரத்தில் செயல்படவில்லை என்றாலும் இரவு நேரத்தில் செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இது தொடர்பாக மாநகராட்சி நீர்வாகத்திற்கு பல முறை புகார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கும் மக்கள் அவர்களும் நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை, என்று சலித்து கொள்கின்றனர். 

குறிப்பாக, கோவையிலுள்ள செல்வபுரம், புட்டுவிக்கி, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை போன்ற இடங்களில் ப்ளீச்சிங் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் கழிவுகளை பெரும்பாலும் நொய்யல் ஆற்றில் தான் கலந்து விடுகிறார்கள் என்றும், மழைக் காலத்தில் ஆற்றில் அதிக நீர் வருவதால் வெண்நுரை படர்ந்து பரவுவதை பார்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 



இந்த நீரை பயன்படுத்தும் மக்களும், கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று கவலை தெரிவிக்கின்றனர். 

காற்றில் எங்கும் வெண் நுரை..! 

இதே போல், சிங்காநல்லூர் அணைக்கட்டுக்கு வரும் நீரில் கூட நுரை கலந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். செல்வபுரம் முதல் ஆத்துப்பாலம் வரை அடர்த்தியான மக்கள் இருப்பதால் அவர்கள் பயன்படுத்தி வெளியிடும் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லாமல் ஆற்றுநீருடன் கலக்கிறது என்று சொல்லபடுகிறது. இதனால், கழிவுநீருடன் ஆற்றுநீரும் சேர்ந்து சக்கடையாக மாறுகிறது. மழைக் காலங்களில் நுரையுடன் பொங்கி பாய்கிறது. 

அதே சமயத்தில் காற்று வீசும் போது 10 மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று வாகன ஓட்டிகள் மீதும், குடியிருப்பு இடங்களின் மீதும் படர்கிறது. இந்த நுரை படும் போது, தோல் நோய்கள், சுவாச கோளாறுகள் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆலைகள் ஒரு புறம் இருந்தாலும் இன்றைய காலத்தில் நாம் பயன்படுத்தும் ராசயன பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதால் கூட நீர் மாசுபாடு ஏற்படும் என்று சொல்கின்றனர். 

சுத்தமான நீர் ஆதாரமான ஆற்றுநீரை, கழிவு நீராக தான் வருடா வருடம் பார்க்க முடிகிறது என்று கவலை பட சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கோவை மட்டுமல்லாமல், திருப்பூரிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்தையை நினைவு கூர்ந்தார் ஒரு குடியிருப்பு வாசி. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், திருப்பூரில் 2018ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சாயகழிவுகள் அனைத்தும் ஊருக்குள் வந்த சம்பவத்தை மறக்கவே முடியாது.

இப்படி, ஆறுகளை மாசுபடுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது கடும் சட்டம் பாயும் வரை, இதுபோன்ற அவலங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கும் என்று அங்களாய்கின்றனர் மக்கள். 

கொரோனா போன்ற பெருந்தொற்றிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும், இந்த சூழ்நிலையில் இயற்கைக்கு எதிரான காரியங்களில் ஈடுபவது ஒரு மிகப் பெரிய ஆபத்தையே 

வருங்காலத்தில் கொண்டுசேர்க்கும் என்பதில் ஐயில்லை, என்கின்றனர் பொது மக்கள். 

ஆற்றங்கரையில் உருவானது தான் நம் நாகரிகம்; இப்படியே போனால் நாளை ஆறே இருக்காது என செய்துவிடுவார்கள், போல் உள்ளது என்று கவலைப்பட தெரிவிக்கின்றனர் மக்கள். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...