கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியில் 1000 ஹெக்டர் பரப்பளவில் அறுவடைக்கு தயராராக இருந்த வெங்காயம் தண்ணீரில் மூழ்கி நாசம்

கோவை: தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்று படுக்கைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

கோவை: தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்று படுக்கைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. 



இந்நிலையில், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு ரக பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வரும் நிலையில், நேற்று பெய்த கன மழை காரணமாக அறுவடை செய்ய தயார் நிலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம் தண்ணீரில் மூழ்கியும், பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடபட்ட வாழைகள் பலந்த காற்றின் காரணமாக சாய்ந்து நாசம் அடைந்து உள்ளது.

குறிப்பாக, தொண்டாமுத்தூர் முண்டந்துறை, நல்லூர் வயல், மரக்காடு பகுதிகளில் கதளி ரக வாழைகளை ஏராளமானோர் பயிரிட்டு உள்ளனர். நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையில் குழை தள்ளபட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து உள்ளது. 



இது குறித்து, முண்டந்துறை பகுதியை சேர்ந்த விவசாயி ராசு என்பவரின் ஏழரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து கண்னீர் மல்க அவர் கூறுகையில், குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாகவும் தன்னிடம் உள்ள இரண்டு டிராக்டர் டெம்போ உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து வாழை பயிரிடப்பட்டதாக கூறியவர், அடுத்த மாதம் அறுவடை செய்ய இருந்த நிலையில் 9000 வாழைகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவருக்கு 25 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார். 

இதேபோல், தனசேகர் என்பவரது தோட்டத்தில் பயிரிடபட்ட 900 வாழைகள் நாசம் அடைந்து உள்ளது. இதேபோல் பாக்கு மரங்கள், மக்காசோளம் பயிரிட்டு இருந்த பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் இலை, வாழை, நேந்திரம், கதளி ரக வாழைகள் பயிரிடபட்டு இருந்த நிலையில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மழையின் காரணமாக சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சேத மதிப்பு குறித்து ஆய்வறிக்கைக்கு பின்பு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் கல்கொத்தி மலை பகுதியில் பழங்குடியினர் வசித்து வரும் இடத்தில் 26 புதிய வீடுகள் கட்டபட்டு வரும் நிலையில் தற்காலிகமாக அருகில் உள்ள வனப்பகுதியில் தற்காலிக வீடுகளில் தங்கி உள்ளனர். 

அதன் மேற்கூரைகள் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து முடிவடையாத வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

சிறுவாணி சாலையில் இருட்டு பள்ளம், சாடிவயல் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததன் காரணமாக ஏழு மழை கிராமங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...