மனநலம்/ஆதரவற்று திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை: மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று திரிபவர்களை கண்டறிந்து, அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து உரிய சிகிச்சை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று திரிபவர்களை கண்டறிந்து, அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து உரிய சிகிச்சை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோரங்களிலும், ரயில் நிலையங்களிலும், அரசு மருத்துவமனை வளாகங்களிலும் படுத்து உறங்கி தங்களின் நாட்களை கடத்தி வரும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மிகவும் வாழ்க்கை துயரமானது.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் இந்தப் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “மனநலம் பாதிக்கப்பட்டு பலர் தற்போது பல்வேறு பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். அதில் பலருக்குக் கொரோனா தொற்று உள்ளது. ஆனால், அவர்களுக்குப் போதிய உணவும் தங்குமிடமும் இல்லை. எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி அவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்", என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், இது தொடர்பாக தனியார் நாளிதழில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி, குறிப்பாக பழனி மலையைச் சுற்றி மனநலம் பாதிக்கப்பட்ட பலர் சுற்றித் திரிவதாகத் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, “தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து அந்தப் பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என உத்தரவிட்டனர்.

"மேலும், நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கையை வருகிற 18 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...