இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் உயிரிழந்த விவகாரம் - சிபிசிஐடி போலீசார் அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் சோதனை!

கோவை: இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் கோவையில் அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

கோவை: இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் கோவையில் அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.



இலங்கை கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்காவை கோவையில் அவரது காதலி விஷம் வைத்து கொன்று விட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் வசித்து வந்த பிரதீப் சிங் என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது உடலை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த பரிந்துரைத்ததன் பேரில் சந்தேகத்திற்கு இடமான மரணம் என பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



இதனையடுத்து, பிரதீப் சிங்கின் உறவினர்கள் என கூறி சிவகாமி சுந்தரி மற்றும் அமானி தான்ஜி என்ற இரு பெண்கள் அவரது உடலைப் பெற்றுச் சென்று ஜூலை 4ம் தேதி மதுரையில் தகனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட பீளமேடு காவல்துறையினர் பிரதீப் சிங் என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை போலியானது என கண்டறிந்தனர். இதனையடுத்து, சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் உயிரிழந்த நபருடன் வசித்து வந்த இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த அமானி தான்ஜி மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி என்ற இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் இலங்கையில் பல்வேறு கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய கடத்தல் கும்பல் தலைவன் மதுமா சந்தன வசந்தா பெரேரா என்கிற அங்கொட லொக்கா என்பது தெரிய வந்தது. அவனுக்கு ஆதார் அட்டை எடுக்கவும் குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுக்க சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சிவகாமி சுந்தரியின் நண்பர் தியானேஸ்வரன் உதவியது தெரியவந்தது.

இதுகுறித்து புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்த காவல்துறையினர் ஈரோடு இந்திராநகர் பகுதியில் வைத்து தியானேஸ்வரணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இருந்து வெளிநாட்டு கரன்சிகள், லேப்டாப் மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, மூவரையும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த அமானி தான்ஜிக்கு கருச்சிதைவு ஏற்பட்ட காரணமாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி ராஜு தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து அங்கொட லொக்கா உயிரிழப்பு மற்றும் அவனது உடல் தகனம் குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கோவையில் அங்கொட லொக்கா வசித்து வந்த சேரன் மாநகர் பகுதியில் உள்ள வீட்டில் டி.எஸ்‌.பி ராஜு தலைமையில் 10 பேர் கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், அருகில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களிலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த அமானி தான்ஜி யார்? அவருக்கும் அங்கொடலொக்காவுக்கும் என்ன தொடர்பு? இவர்கள் இருவருக்கும் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரியுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? கோவையில் ஏதேனும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...