கோவை: வால்பாறையில் உலக புலிகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை துணைகள இயக்குநர் வழங்கினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் சார்பில் கடந்த(29.07.2020) உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப் பகுதிகளிலிருந்து 295 பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, ஓவியப் போட்டி, கைவினை மற்றும் முகச்சாயம் பூசுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பழங்குடியினர் பள்ளி, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பங்களிப்பு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பங்கேற்பாளர்கள் சான்றும், வெற்றி பெற்ற 80 மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கத்தை ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் வனத்துறை அலுவலகத்தில் வழங்கினர். வன உதவி அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் அருகிலுள்ள வனச்சரக அலுவலகம், அந்தந்த பள்ளிகள் மற்றும் தபால் மூலம் அந்தந்த பகுதிகளில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.