கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் ஜடையம்பாளையம் காய்கறி மண்டி தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மண்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் ஜடையம்பாளையம் காய்கறி மண்டி தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மண்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

இன்று, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் அவருடைய அலுவலகம் மற்றும் அருகில் இருந்த மண்டிக்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நாளை ஜடையம்பாளையம் காய்கறி மண்டியில் பணிபுரியும் ஓட்டுனர்கள், மண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கபட்ட ஜடையம்பாளையம் காய்கறி மண்டி தலைவர், கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.